செய்திகள்

பஞ்செட்டியில் நூற்றாண்டு விழா: எம்.ஜி.ஆர். உருவபடத்தை திறந்துவைத்து நலத்திட்ட உதவி- எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்

Published On 2017-09-03 09:48 GMT   |   Update On 2017-09-03 09:48 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் உருவபடத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறார்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதற்காக 23 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் உருவபடத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறார்.

இதைத் தொடர்ந்து ரூ.51.33 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் மேலும் ரூ.76.46 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பென்ஜமின், க.பாண்டிய ராஜன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்கிறார்கள்.

விழாவையொட்டி முன்னதாக இன்று காலை மாணவ- மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. பின்னர் மதியம் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை கச்சேரி நடந்தது.

விழா நடைபெறும் இடத்தில் எம்.ஜி.ஆர். புகைப் பட கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

விழாவில் எம்.பி.க்கள் வேணுகோபால், அரி, எம்.எல்.ஏ.க்கள் பலராமன், விஜயகுமார், நரசிம்மன், கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம், முன்னாள் மாணவரணி செயலாளர் செங்கை சேகர், எஸ். சரவணன், ராகேஷ் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மோகன வடிவேல்,

பொன்னேரி நகர செயலாளர் உபயதுல்லா, முன்னாள் பேருராட்சி தலைவர் சங்கர், கழக உறுப்பினர் செந்தில் குமார், மீஞ்சூர் ஓன்றிய மாணவரணி துணைச் செயலாளர் சலிம், பானுபிரசாத், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மஜா, ஜனார்த்தனம்,

முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், அமிர்தலிங்கம், சுமித்ரா குமார், அனுப்பம்பட்டு சார்லஸ், பஞ்செட்டி ரவிச்சந்திரன், ஏ.கே.எஸ். சுதாகர், பிரகாஷ், நடராஜன், கும்மிடிபூண்டி அபிராமன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவையொட்டி ஏ.டி.ஜி.பி. திரிபாதி மேற் பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News