செய்திகள்
குமுளி சோதனைச்சாவடியில் பால் லாரியில் சோதனை நடத்திய அதிகாரிகள்.

பாலில் கலப்படமா?: தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகளில் கேரள அதிகாரிகள் சோதனை

Published On 2017-08-30 10:15 GMT   |   Update On 2017-08-30 10:15 GMT
தமிழகத்தில் இருந்து செல்லும் பாலில் கலப்படமா? என கேரள அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கூடலூர்:

கேரள மக்களின் தேவைக்காக தமிழக பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் பால் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த பால் கெடாமல் இருப்பதற்காக பார்மலின் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் ஜவ்வரிசியை துணியில் கட்டி பாலில் போட்டு வைத்தால் கெட்டியாக மாறி அதிக லிட்டர் தண்ணீர் அதில் கலந்து மோசடி செய்து வருகின்றனர்.

தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்டி வருகிறது. இதனையொட்டி அதிக அளவு பால் தேவைப்படுவதால் தமிழகத்தில் இருந்து குமுளி, பாலக்காடு, களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

குமுளி சோதனைச் சாவடியில் பால் கொண்டு செல்லும் லாரிகளை கேரளா உணவு பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பால் மாதிரியை சோதனை செய்வதற்காக எல்லைப் பகுதியில் தற்காலிக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

பால் வண்டிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் யூரியா, காரம், பாம்லின் உள்ளிட்டவை கலந்துள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஆய்வுக்கு பின்னரே வாகனங்கள் அனைத்தும் கேரள எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது.

இந்த சோதனை 24 மணி நேரமும் நடைபெறும். ஓணம் பண்டிகை முடியும்வரை அதிகாரிகள் இவற்றை தீவிரமாக கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News