செய்திகள்
சு.ரவி எம்.எல்.ஏ.

கமல்ஹாசன் ஒரு கோழை: அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ. காட்டம்

Published On 2017-08-16 05:44 GMT   |   Update On 2017-08-16 05:44 GMT
கமல்ஹாசன் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் மற்றவர்களின் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு பேசுவது கோழைதனமாகும் என்று அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.
அரக்கோணம்:

அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ., கமல்ஹாசன் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சிப்பதற்கு கமல்ஹாசனுக்கு அருகதை இல்லை. தமிழர்கள் நலன் கருதி அவர் பேசட்டும்.

அ.தி.மு.க அரசு மீது எந்த காரணத்தை கொண்டும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு கமல்ஹாசன் தகுதியற்றவராக உள்ளார்.

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட வழக்கு தொடர எடப்பாடியாரை வலியுறுத்த உள்ளோம்.

கமல்ஹாசன் சொந்தமாக தனி கட்சி தொடங்கி அரசியலுக்கு வரட்டும் அல்லது வேறு ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துக் கொண்டு விமர்சிக்கட்டும்.

ஆனால், எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் மற்றவர்களின் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு பேசுவது கோழைதனமாகும். இது ஆண்மைக்கு அழகல்ல.

விஸ்வரூபம் படம் வெளி வந்தபோது, எவ்வளவோ பிரச்சினைகளை கமல்ஹாசன் சந்தித்தார். படம் வெளியிட முடியாமல் அவர் தவித்தார். அப்போது ஜெயலலிதா உதவியால் தான் விஸ்வரூப படம் வெளியிட முடிந்தது.

ஜெயலலிதா ஆட்சியை வழி நடத்துகிறோம். நன்றியை மறந்து கமல் விமர்சனம் செய்கிறார். விரைவில் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News