செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் சம்பத் அறிவிப்பு

Published On 2017-08-07 11:52 GMT   |   Update On 2017-08-07 11:52 GMT
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வருகிற 9-ந்தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

மேலும், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அன்று மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று பணிநாளாக செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News