செய்திகள்

டாஸ்மாக் கடைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய குடிமகன்கள்

Published On 2017-07-26 05:49 GMT   |   Update On 2017-07-26 05:49 GMT
குடித்து விட்டு சென்றால் போலீசார் பிடிக்கிறார்கள் என கூறி டாஸ்மாக் கடைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய குடிமகன்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சூலூர்:

சூலூர் அருகே உள்ள பள்ளபாளையப் பகுதியிருந்து பட்டணம்புதூர் செல்லும் வழியில் குளக்கரை அருகில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இது ஊருக்கு வெளியே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளபாளையம் ,பட்டணம் புதூர் சாலையில் அமைந்துள்ளது. இதனால் தூரம் அதிகம் என்பதால் மது அருந்த செல்லுபவர்கள் இருசக்கர வாகனத் தில் மூன்று பேர் செல்வது சாதாரணமாக உள்ளது. அதுதவிர இந்த மதுக் கடையில் பார் வசதி இல்லாததால் மது அருந்துபவர்கள் மது பானங்களை பொது மக்கள் நடமாடும் பகுதியில் வைத்து அருந்தி வருகின்றனர்.

மேலும் குடித்துவிட்டு மதுபாட்டில்கள அருகிலிருக்கும் விவசாய நிலங்களிலும் பொதுமக்கள் நடமாடும் ரோட்டிலிலும் வீசிவிட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது .

இந்நிலையில் நேற்று மாலை சூலூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது பொதுப் பாதையில் மது அருந்தியவர்களையும், குடித்துவிட்டு வாகனத்தில் மூன்றுபேர் அமர்ந்து வந்தவர்களையும் பிடித்தனர்.

அதனை அறிந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர்கள் திடீரென கடையை விட்டு வெளியேவராமல் கடை வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் ஜெயக்குமார் அப்பகுதியில் இருந்த போலீசாருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.அதைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

குடிக்க வந்தவர்களே டாஸ்மாக் கடைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News