செய்திகள்

பராமரிப்பு பணி: மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில்கள் ரத்து

Published On 2017-03-25 03:30 GMT   |   Update On 2017-03-25 03:30 GMT
திருவொற்றியூர் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை), 27-ந்தேதி ஆகிய 2 நாட்களுக்கு மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:

திருவொற்றியூர் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை), 27-ந்தேதி ஆகிய 2 நாட்களுக்கு மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே நாளை இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டிஎண்:42046).

* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 11.20 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42045).

* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே நாளை நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42001).

* கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே 27-ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42002).

எண்ணூர்-மூர்மார்க்கெட் இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்.

* கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே நாளை இரவு 7.30 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42042).

* கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே நாளை இரவு 8.10 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42044).

* சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் இடையே நாளை இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42420).

* கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே நாளை இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42608).

* சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே நாளை இரவு 8.40 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42422).

* கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே 27-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42004).

மூர்மார்க்கெட்-எண்ணூர் இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்

* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 7.40 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42035).

* வேளச்சேரி-கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 7.10 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42657).

* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 8.15 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42037).

* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42039).

* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42041).

* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42043).

* மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை இடையே 27-ந்தேதி அதிகாலை 4.20 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (42401).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News