செய்திகள்
வி.பி.சந்திரசேகர்

அ.தி.மு.க.வில் 90 சதவீத தொண்டர்கள் தீபாவை ஆதரிக்கிறார்கள்: முன்னாள் எம்.எல்.ஏ.

Published On 2017-01-18 10:27 GMT   |   Update On 2017-01-18 10:27 GMT
அ.தி.மு.க.வில் உள்ள 90 சதவீத தொண்டர்கள் தீபாவை ஆதரிக்கிறார்கள் என்று பொள்ளாச்சி முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சந்திரசேகர் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி:

அ.தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சந்திரசேகர் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தலைவர்கள் ஒரு பக்கமும் , தொண்டர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். ஆகவே நான் தொண்டர்கள் பக்கம் செல்ல விரும்புகிறேன். ஜெயலலிதா எனக்கு எம்.எல்.ஏ. பதவி உள்ளிட்ட பல பதவிகளை கொடுத்தவர்.

தற்போது நான் தீபாவிற்கு ஆதரவு தெரிவிப்பது தான் ஜெயலலிதாவுக்கு செலுத்தும் நன்றி ஆகும். அ.தி.மு.க.வில் உள்ள 90 சதவீத தொண்டர்கள் தீபாவை ஆதரிக்கின்றனர். பதவியில் உள்ளவர்கள் மட்டுமே சசிகலாவை ஆதரிக்கின்றார்கள். அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ள பொள்ளாச்சி தீபாவின் கோட்டையாக மாறி வருகிறது. தினகரன், திவாகரன் ஆகியோர் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்கள். முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியின் கருத்து வரவேற்கத்தக்கது. நான் கிராமம்- கிராமமாக சென்று தீபாவிற்கு ஆதரவு திரட்டுவேன். தீபா பேரவைகளை ஒருங்கிணைப்பேன்.

சசிகலா முதல்- அமைச்சரானால் அ.தி.மு.க பிளவுபடும் .

இவ்வாறு அவர் கூறினார்

முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சந்திரசேகர் 1989-ல் பொள்ளாச்சி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1991-ல் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் குடிநீர் வடிகால் வாரியத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Similar News