செய்திகள்
சேகர் ரெட்டி

அப்பல்லோவில் திருப்பதி லட்டு கொடுத்த சேகர்ரெட்டி

Published On 2016-12-09 09:39 GMT   |   Update On 2016-12-09 09:39 GMT
ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்பதற்காக திருப்பதியில் சிறப்பு வழிபாடு செய்தவர் சேகர்ரெட்டி. கடந்த அக்டோபர் 12-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து கூடை நிறைய லட்டு பிரசாதம் கொடுத்துச் சென்றார்.
வேலூர்:

வருமான வரித்துறை சோதனையில் சென்னையில் சேகர்ரெட்டி வீட்டில் ரூ.106 கோடி பணம், 127 கோடி தங்கம் சிக்கியது.

காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் ரெட்டி. காட்பாடி காந்திநகரில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார்.

ரெயில்வே கான்டிராக்டராக வாழ்க்கையை தொடங்கிய அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் நல்ல நெருக்கம் உண்டு. அதனால் லட்டு பிரசாதம் வாங்கிக் கொடுத்து தமிழக அரசியல்வாதிகளுடன் நெருக்கமானார். அ.தி.மு.க. முன்னணி தலைவர்களுடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது. நெருக்கம் அதிகமானதால் ஏராளமான கான்டிராக்டர் பணிகள் கிடைத்தது.

வீராணம் ஏரி தூர்வாரும் வேலை மற்றும் சென்னை-புதுச்சேரி சாலை விரிவாக்கம் உள்பட பல கான்டிராக்ட் பணிகளை செய்துள்ளார்.

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்பதற்காக திருப்பதியில் சிறப்பு வழிபாடு செய்தவர்.

கடந்த அக்டோபர் 12-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து கூடை நிறைய லட்டு பிரசாதம் கொடுத்துச் சென்றார்.

மணல் தொழிலிலும் நுழைந்தார். தமிழகத்தின் பெரிய மணல் வியாபாரி என்ற அளவுக்கு உயர்ந்த அவர், திருப்பதி தேவஸ்தான போர்டு பொருளாளராகவும் உள்ளார்.



Similar News