செய்திகள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

Published On 2016-12-03 04:08 GMT   |   Update On 2016-12-03 04:08 GMT
வங்க கடலில் உருவான நடா புயல் காரணமாக நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், மேட்டூர் அணைக்கு சற்று நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.
மேட்டூர்:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டுமே கைகொடுக்கவில்லை. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்தது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான நடா புயல் காரணமாக நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது.

இதனால், மேட்டூர் அணைக்கு சற்று நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 102 கன அடி வீதம் வந்த தண்ணீர் நேற்று விநாடிக்கு 171 கன அடியாக உயர்ந்தது.

இன்று மேலும் அதிகரித்து விநாடிக்கு 287 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வருகிறது. ஒரே நாளில் 116 கன அடி வீதம் தண்ணீர் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 750 கன அடி வீதம் நீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர் வரத்து குறைவாக உள்ளதால் நேற்று 40.38 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.29 அடியாக சரிந்தது.

Similar News