செய்திகள்

அடுத்த மாதம் 5 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கும்

Published On 2016-09-26 09:43 GMT   |   Update On 2016-09-26 09:43 GMT
அக்டோபர் மாதம் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கிப் பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:

பொதுவாக மாதத்தின் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாக உள்ளன. இந்நிலையில் அக்டோபர் மாதம் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகைகளால் தொடர்ச்சியாக ஐந்து நாள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

அக்டோபர் மாதம் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுத பூஜையும், 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமியும், 12-ம் தேதி புதன்கிழமை மொகரம் பண்டிகையும் வருகிறது. இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை நாளாகும். 8-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வழக்கமான விடுமுறையாகும்.

இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் வங்கி பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுவதுடன், ஏ.டி.எம். மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே, பண்டிகைகள் வருவதால் ஏ.டி.எம். மையங்களை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் தேவைப்படும் பணத்தை முன்னரே எடுத்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.

Similar News