செய்திகள்
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்

இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 61/2

Published On 2021-08-04 12:37 GMT   |   Update On 2021-08-04 12:37 GMT
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளை வரை சிராஜ், பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
நாட்டிங்காம்:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ் -சிப்லி ஜோடி களமிறங்கினர். இந்திய அணியின் பும்ரா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 5-வது பந்தில் எல்பிடபுள்யூ முறையில் ரோரி பர்ன்ஸ்சை அவுட் ஆக்கினார். இதனையடுத்து சிப்லியுடன் - ஜாக் கிராவ்லி ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்த ஜோடியை சிராஜ் பிரித்தார். அவர் வீசிய 20-வது ஓவரில் ரோரி பர்ன்ஸ் பேட்டில் ஊரசியதாக அம்பயரிடம் பலத்த முறையீட்டில் இந்திய அணியினர் ஈடுபட்டனர். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரிவ்யூ கேட்கவா வேண்டாமா என சக வீரர்களிடம் ஆலோசனை நடத்தினார். அனைவரும் சந்தேகத்துடன் இருந்தனர். ரிஷப் பந்த் மட்டும் அவுட் என விராட் கோலியிடம் தொடர்ந்து கூறினார். இதனால்  விராட் கோலி ரிவ்யூ எடுத்தார்.



இந்நிலையில் இது 3-வது அம்பயருக்கு சென்றது. அதற்குள் விராட் கோலி தவறாக ரிவ்யூ எடுத்து விட்டோமோ என தலையில் கை வைத்தபடி இருந்தார். 3-வது அம்பயரின் முடிவில் அவுட் என வந்ததும் அனைத்து வீரர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கேப்டன் விராட் கோலி அவர் பாணியில் ஆக்ரோசமாகவே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து உணவு இடைவேளை வரை இந்திய அணியால் விக்கெட் ஏதும் எடுக்க முடியவில்லை. இங்கிலாந்து அணி 25 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. ரூட் 12 ரன்களுடனும் சிப்லி 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Tags:    

Similar News