செய்திகள்
நவாமி ஒசாகா

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா

Published On 2019-09-22 02:02 GMT   |   Update On 2019-09-22 02:02 GMT
ஜப்பானில் நடைபெற்று வரும் பான்பசிபிக் ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டிக்கு அந்நாட்டு வீராங்கனை நவோமி ஒசாகா முன்னேறியுள்ளார்.
ஒசாகா:

பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று  வருகிறது.

உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா முதலில் நடைபெற்ற கால் இறுதியில் கஜகஸ்தானின் யுலியா பதிண்ட்செவாவுடன் மோதினார். இதில் நவாமி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில், நவாமி ஒசாகா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். நேற்று ஒரே நாளில் ஜப்பானின் நவோமி ஒசாகா இரட்டை வெற்றி பெற்றார். 

இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகா, ரஷியாவின் பாவ்லிசென்கோவா மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையுடன் 470 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News