செய்திகள்
டி மரியா

யூரோ சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட்டை 3-0 என வீழ்த்தியது பிஎஸ்ஜி

Published On 2019-09-19 10:28 GMT   |   Update On 2019-09-19 10:28 GMT
யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடக்க சுற்றில் ரியல் மாட்ரிட்டை 3-0 என வீழ்த்தியது பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன்.
2019-20 யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - பிஎஸ்ஜி அணிகள் மோதின. நெய்மர், கிலியன் மப்பே, எடின்சன் கவானி ஆகியோர் இல்லாத நிலையிலும், பிஎஸ்ஜி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஏஞ்சல் டி மரியா 14-வது நிமிடத்திலும், 33-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பிஎஸ்ஜி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஸ்டாபேஜ் நேரத்தில் (90+1) பிஎஸ்ஜி அணியின் தாமஸ் முனியர் ஒரு கோல் அடிக்க பிஎஸ்ஜி 3-0 என ரியல் மாட்ரிட் அணியை துவம்சம் செய்தது.



அட்லெடிகோ மாட்ரிட் - யுவான்டஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. அதேபோல் பார்சிலோனா - டார்ட்மண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது.

நடப்பு சாம்பியன் லிவர்பூல் அணியை நபோளி 2-0 என வீழ்த்தியது. மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முனிச், அஜாக்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
Tags:    

Similar News