செய்திகள்
ஷுப்மான் கில்

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிராக சதம் அடிக்கும் வாய்ப்பை தவறிவிட்ட ஷுப்மான் கில்

Published On 2019-09-17 13:18 GMT   |   Update On 2019-09-17 13:18 GMT
தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இளம் வீரரான ஷுப்மான் கில் 92 ரன்கள் சேர்த்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மைசூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் ஈஸ்வரன், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஈஸ்வர்ன் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பன்சால் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

3-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய ஷுப்மான் கில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கருண் நாயருடன் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சகா களம் இறங்கினார். இருவரும் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இந்தியா ‘ஏ’ அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்துள்ளது. கருண் நாயர் 78 ரன்களுடனும், சகா 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Tags:    

Similar News