செய்திகள்
கோலி டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படம்

டவுசருடன் இருக்கும் விராட் கோலி படத்தை போக்குவரத்து அபராதத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்

Published On 2019-09-05 14:26 GMT   |   Update On 2019-09-05 14:26 GMT
விராட் கோலி இன்று டுவிட்டரில் அரை நிர்வாணத்துடன் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் அந்த படத்தை போக்குவரத்து அபராதத்துடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்துள்ளனர்.
நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தம் நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும். மேலும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலைவிதிகளை மீறுபவர்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில், ஒடிசா மாநிலத்தில் சாலை விதிகளை மீறியதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.47 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 13 ஆயிரத்து 500-க்கும் பெறுமானம் உள்ள வாகனத்திற்கு ரூ. 23 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. ஹரியானாவைச் சேர்ந்த ஒரே நபருக்கு 37 ஆயிரும் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இப்படி அபராதம் விதிக்கப்பட்டால் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்க வேண்டியதுதான் என வாகன ஓட்டிகள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அரை நிர்வாணத்துடன் இருக்கும் தனது போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதிய மோட்டார் வாகன சட்டத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மேல் சட்டை இல்லாமல் சாலையில் அமர்ந்திருப்பது  புகைப்படத்துடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு சில பின்வருமாறு:

யாரெல்லாம் கோலியின் புகைப்படத்தை பார்த்தவுடன் அபராதத்தொகை எவ்வளவு கணக்கிடுகிறிர்கள்? என சமூக வலைதள பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய பணக்காரர் அபராதத்தொகையை செலுத்திய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம். மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.




சாலை விதி மீறியதாக போக்குவரத்து போலீசாரிடம் அபராதம் விதித்தபோது நமது நிலைமை? என தெரிவித்துள்ளார்.  



நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய வாகனச் சட்டத்தையடுத்து, விராட் கோலி வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

Similar News