செய்திகள்
ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் கால் இறுதிக்கு தகுதி

Published On 2019-09-02 09:59 GMT   |   Update On 2019-09-02 09:59 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளனர்.
நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 3-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் 4-வது சுற்றில் டேவிட் கோபினை (பெல்ஜியம்) எதிர் கொண்டார்.

இதில் பெடரர் 6-2, 6-2, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் டிமிட் ரோவை (பல்கேரியா) சந்திக்கிறார்.

டிமிட்ரோவ் 4-வது சுற்றில் 7-5, 6-3, 6-4 என்ற கணக்கில் மினாவூரை (ஆஸ்திரேலியா) தோற்கடித்தார்.

வாவ்ரிங்கா கால் இறுதியில் 5-ம் நிலை வீரரான மெட்வதேவை (ரஷியா) சந்திக்கிறார்.

23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 8-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 4-வது ரவுண்டில் பெட்ரோ மேட்ரிக்கை (செக்குடியரசு) எதிர்கொண்டார். இதில் செரீனா 6-3, 6-4 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்லேபெர்டி (ஆஸ்திரேலியா) 3-வது வரிசையில் உள்ள பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்கள்.

சீன வீராங்கனை வாங் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஹோண்டா ஆகியோர் அவர்களை முறையே வீழ்த்தினர்.
Tags:    

Similar News