செய்திகள்
விராட் கோலி

ஒவ்வொரு நாளையும் கடப்பது கடினமாகவே இருந்தது. ஆனால்... -விராட் கோலி

Published On 2019-08-03 07:54 GMT   |   Update On 2019-08-03 09:09 GMT
டி20 தொடரில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதவுள்ளன. இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடக்கிறது. எஞ்சிய போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் அரங்கேறுகின்றன.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாடெர்ஹில்லில் இன்று, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது. இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:



உலக கோப்பையின் முதல் அரையிறுதியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்த சில நாட்களை கடப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. குறிப்பாக அந்த தொடர் முடியும் வரை அப்படித்தான் இருந்தது.

அந்த நாட்களில் காலையில் எழும்போதெல்லாம் மோசமானதாகவே இருக்கும். ஆனாலும், அதன் பின்னர் வாழ்க்கையை நகர்த்திதான் ஆக வேண்டும். நாங்கள் தொழிலில் நேர்த்தியாக இருப்பவர்கள். இதனை கடந்தே ஆக வேண்டும்.

ஒவ்வொரு அணியும் அப்படித்தான். அதனால் அதிலிருந்து ஒரு வழியாக மீண்டு விட்டோம். நேற்று பீல்டிங் செஷனில் இருந்தது மிகவும் நல்லதாக அமைந்தது. அனைத்து வீரர்களும் விளையாட ஆர்வமாக இருந்தனர். ஒரு அணியாக அப்படி இருப்பதுதான் சிறப்பானதாக இருக்கும்.

ஆட்டத்தில் நிச்சயம் பிட்ச் குறித்து கவனிப்போம். கடைசி முறையும் இதைத்தான் செய்தோம். சிறப்பான ஸ்கோர்களும் கிடைத்தது. இந்த தொடரிலும் நல்ல முறையில் விளையாட ஆவலாக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News