செய்திகள்
பிவி சிந்து சாய்னா நேவால்

உலக பேட்மிண்டன் தரவரிசை: முதல் 10 இடத்திற்குள் பிவி சிந்து, சாய்னா நேவால்

Published On 2019-07-31 08:39 GMT   |   Update On 2019-07-31 08:39 GMT
பேட்மிண்டன் உலக பெடரேசன் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் முதல் 10 இடத்திற்குள் உள்ளனர்.
பேட்மிண்டன் உலக பெடரேசன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசையை வெளியிட்டது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து 5-வது இடத்தையும், சான்யா நேவால் 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முக்தா அக்ரே 6 இடங்கள் முன்னேறி 62-வது இடத்தையும், ரிதுபர்னா தாஸ் ஒரு இடம் முன்னேறி 65-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.



ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 10-வது இடத்தையும், சமீர் வர்மா 13-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சாய் பிரணீத் 20-வது இடத்தில் உள்ளார். எச் எஸ் பிரணோய் 31-வது இடத்திலும், பாருபல்லி காஷ்யப் 35-வது இடத்திலும், உள்ளனர்.
Tags:    

Similar News