செய்திகள்
ஹோல்டர் விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸுடன் விளையாட இந்திய அணி நாளை அமெரிக்கா பயணம்

Published On 2019-07-28 08:52 GMT   |   Update On 2019-07-28 08:52 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடக்க இருப்பதால், இந்திய அணி நாளை அமெரிக்கா புறப்படுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுடன் மூன்று 20 ஓவர் ஆட்டம், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில்ஸ்சில் நடக்கிறது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுடன் விளையாட நாளை (29-ந்தேதி) இரவு அமெரிக்கா செல்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக அங்கு இரண்டு 20 ஓவர் போட்டி நடக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நிருபர்கள் சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஆகஸ்டு மாதம் 3-ந்தேதியும், 2-வது போட்டி 4-ந்தேதியும் அமெரிக்காவில் நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் கயானாவில் நடைபெறுகிறது. 20 ஓவர் ஆட்டங்கள் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் ஆகஸ்டு 8, 11 மற்றும் 14-ந்தேதிகளில் கயானா, போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இந்த ஆட்டங்கள் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

அதன் பின்னர் டெஸ்ட் தொடர் ஆகஸ்டு 22-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 3-ந்தேதியுடன் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம் முடிகிறது.

இந்திய அணி உலக கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்ற பிறகு வெஸ்ட் இண்டீஸுடன் ஆடுகிறது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கு இந்த தொடரில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.
Tags:    

Similar News