செய்திகள்
பிவி சிந்து

பிவி சிந்துவுக்கு ஏமாற்றம்: இந்தோனேசியா ஓபன் இறுதிப் போட்டியில் அகானே யமகுச்சியிடம் வீழ்ந்தார்

Published On 2019-07-21 10:13 GMT   |   Update On 2019-07-21 10:13 GMT
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதிப் போட்டியில் அகானே யமகுச்சிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.  இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார்.

ஆட்டம் தொடங்கியது முதலே அகானே யமகுச்சி ஆதிக்கம் செலுத்தினார். அவரது ஆட்டத்திற்கு அனுபவம் வாய்ந்த பிவி சிந்துவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அகானே யமகுச்சி 21-15, 21-16 என நேர்செட் கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தினார்.



இதற்கு முன் இருவரும் 14 முறை மோதியுள்ளனர். இதில் பிவி சிந்து 10 முறை வென்றுள்ளார். மேலும் கடைசி நான்கு போட்டிகளில் பிவி சிந்து யமகுச்சியிடம் தோல்வியடைந்ததே கிடையாது. இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் யமகுச்சி சிறப்பாக செயல்பட்டு பிவி சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 2-வது இடம் பிடித்து பிவி சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
Tags:    

Similar News