செய்திகள்
செரீனா வில்லியம்ஸ்

தரநிலை பெறாத வீராங்கனையை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா

Published On 2019-07-11 16:00 GMT   |   Update On 2019-07-11 16:00 GMT
விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் தரநிலை பெறாத செக்குடியரசு வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா.
விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது அரையிறுதியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத செக்குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவை எதிர்கொண்டார்.

இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.
Tags:    

Similar News