செய்திகள்

இதுபோன்ற கேள்விகள் கேட்டால் நான் வெளியேறி விடுவேன்-ஆத்திரமடைந்த குல்பதின் நயிப்

Published On 2019-06-20 10:12 GMT   |   Update On 2019-06-20 10:12 GMT
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் குல்பதின் நயிப் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபோன்ற கேள்விகள் கேட்டால் சென்று விடுவேன் என கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி கடந்த செவ்வாய்க் கிழமை மோதியது.

இந்த போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. போட்டியில் தோல்வி அடைந்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நயிப் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.


அப்போது செய்தியாளர்கள், கடந்த திங்கள் இரவு மான்செஸ்டரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சாப்பிட சென்றபோது சண்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த குல்பதின், ‘நான் அந்த இடத்தில் இல்லை. இந்த கேள்விகளை நீங்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் இல்லை. இது தொடர்பாக கேள்விகளை தொடர்ந்து எழுப்பினால் நான் வெளியேறி விடுவேன்’ என ஆத்திரத்துடன் கூறினார்.

 



 
Tags:    

Similar News