செய்திகள்

பாய்ச்சங் பூட்டியாவின் சாதனையை முறியடித்த சுனில் சேத்ரி

Published On 2019-06-06 13:16 GMT   |   Update On 2019-06-06 13:16 GMT
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 108 ஆட்டத்தில் விளையாடி முன்னாள் இந்திய வீரர் பாய்ச்சங் பூட்டியாவின் சாதனையை முறியடித்தார்.
புதுடெல்லி:

தாய்லாந்தில் உள்ள புரிராம் நகரில் கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில், பிஃபா தரவரிசையில் 82-ஆவது இடத்தில் உள்ள கியூராகாவ் அணியுடன், பிஃபா தரவரிசையில் 101-ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி மோதியது.

இப்போட்டியில்  1-3 என்ற கோல் கணக்கில்  கியூராகாவ் அணியிடம்  வீழ்ந்தது இந்தியா. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 31-வது நிமிடத்தில் ஒரே ஒரு ஆறுதல் கோல் அடித்தார்.

இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் சுனில் சேத்ரி (108 ஆட்டம்) இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டியில் ஆடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு முன்னாள் இந்திய வீரர் பாய்ச்சங் பூட்டியா 107 சர்வதேச போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்தது. 

இந்திய அணிக்காக 108 ஆட்டங்களில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி , இதுவரை 68 கோல்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News