செய்திகள்

டேவிட் வார்னரை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்: மார்க் வாக்

Published On 2019-05-07 09:50 GMT   |   Update On 2019-05-07 09:50 GMT
உலகக்கோப்பை தொடரில் டேவிட் வார்னர் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட வேண்டும் என்று மார்க் வாக் தெரிவித்துள்ளார். #2019WorldCup
உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஓராண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய அணிக்காக இருவரும் களம் இறங்கினர்.

ஆனால் டேவிட் வார்னர் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. ஆரோன் பிஞ்ச், கவாஜா ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வார்னர் 3-வது வீரராக களம் இறங்கினார்.

இந்நிலையில் நான் டேவிட் வார்னரைத்தான் தொடக்க வீரராக களம் இறக்கியிருப்பேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தேர்வாளருமான மார்க் வாக் தெரிவித்துள்ளார்.



மேலும் இதுகுறித்து கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்தவரைக்கும் நம்பர் ஒன் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர்தான். ஆகவே, ஆரோன் பிஞ்ச் உடன் அவர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். பவர்விளே-யில் மிகவும் அபாயகரமான வீரர். அந்த நேரத்தில் அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் அவரால் உயர்த்த முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News