செய்திகள்

2019 சீசனில் அதிவேக அரைசதம்: 19 பந்துடன் லோகேஷ் ராகுல் 3-வது இடம்

Published On 2019-05-06 13:05 GMT   |   Update On 2019-05-06 13:05 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 19 பந்தில் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்து 3-வது இடத்தை பிடித்துள்ளார். #IPL2019 #KXIPvCSK
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மொகாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 170 ரன்கள் குவித்தது. பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் என விரட்டி 19 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 36 பந்தில் 71 ரன்கள் குவித்தார்.



19 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த சீசனில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஹர்திக் பாண்டியா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 17 பந்தில் அரைசதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 18 பந்தில் அரைசதம் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News