search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோகேஷ் ராகுல்"

    • நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
    • உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    ஜோகன்னஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் விதம் மாறாது. நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் நிறைய புதுமுக வீரர்கள் உள்ளனர். உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா அல்லது கோலி விளையாடிய விதத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று இப்போது எதிர்பார்ப்பது சரியானதல்ல.

    அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் வசதியாக உணர வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. நாங்கள் உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சூழ்நிலையில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான விளையாட்டு பயன் அளிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

    இளம் வீரர்களின் ஆட்டம் போதுமானதாக உள்ளது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவது எனக்கு முக்கியம். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    • 30 வயதான ராகுல் ஐ.பி.எல். போட்டியில் 114 ஆட்டத்தில் 105 இன்னிங்சில் 4044 ரன் எடுத்துள்ளார்.
    • ஐ.பி.எல்லில் 4 ஆயிரம் ரன்னை எடுத்த 11-வது இந்தியர் ராகுல் ஆவார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை தோற்கடித்தது.

    இந்த ஆட்டத்தில் லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 56 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 74 ரன் எடுத்தார்.

    30-வது ரன்னை எடுத்த போது அவர் ஐ.பி.எல்.லில் 4 ஆயிரம் ரன்னை தொட்டார். 30 வயதான ராகுல் ஐ.பி.எல். போட்டியில் 114 ஆட்டத்தில் 105 இன்னிங்சில் 4044 ரன் எடுத்துள்ளார். சராசரி 47.02 ஆகும். 4 சதமும், 32 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 132 ரன் எடுத்துள்ளார்.

    ஐ.பி.எல்லில் 4 ஆயிரம் ரன்னை எடுத்த 11-வது இந்தியர் ராகுல் ஆவார். ஓட்டுமொத்தத்தில் 14-வது வீரர் ஆவார்.

    விராட் கோலி (6838 ரன்), தவான் (6477), ரோகித் சர்மா (5966), ரெய்னா (5528), டோனி (5036), ராபன் உத்தப்பா (4952), தினேஷ் கார்த்திக் (4386), அம்பதி ராயுடு (4250), காம்பீர் (4217), ரகானே (4166) ஆகிய இந்திய வீரர்களோடு லோகேஷ் ராகுல் இணைந்தார்.

    • இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
    • கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அத்துடன், இன்றுடன் வங்காளதேச தொடர் முடிவடைந்தது.

    இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் புனேயில் 5ம் தேதியும் 3வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 7ம் தேதியும் நடக்கிறது.

    ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12 மற்றும் 15ம் தேதிகளில் கவுகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறவிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.

    புதிய தேர்வு குழுவை தேர்வு செய்வதில் கால தாமதம் ஆவதால் சேட்டன் சர்மா தலைமையிலான குழு வீரர்களை அறிவிக்கிறது. புதிய தேர்வு குழுவை கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழு நாளை முதல் 28ம் தேதிக்குள் முடிவு செய்யும்.

    இதனால் பழைய தேர்வு குழு நாளை அல்லது நாளை மறுநாள் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்வு குழு உறுப்பினர்கள் பதவிக்கு சேட்டன் சர்மா மற்றும் தற்போது மத்திய மண்டல குழு உறுப்பினரான ஹர்வீந்தர் சிங் ஆகியோர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளனர். முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், அதுல் ஹாசன், நிதில் சோப்ரா, அமய் குருசியா உள்ளிட் டோர் தேர்வு குழு உறுப்பினர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே இலங்கை தொடருக்கான 20 ஓவர் அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்படுகிறார். இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் ரோகித் சர்மாவும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை.

    இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம். முன்னாள் கேப்டன் வீராட் கோலிக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.

    சர்ச்சை விவகாரத்தில் சிக்கிய லோகேஷ் ராகுல், இந்திய ‘ஏ’ அணியில் விளையாடும்போது ராகுல் டிராவிட் உதவி புரிந்தார் என்று தெரிவித்துள்ளார். #KLRahul
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல். இவர் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பெண்கள் குறித்து அவர்கள் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் பிசிசிஐ அவர்களை சஸ்பெண்டு செய்து மீண்டும் விளையாட அனுமதித்தது.

    சர்ச்சையால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட லோகேஷ் ராகுல், இந்தியா ‘ஏ’ அணியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

    ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் இணைந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டதுடன், பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

    நேற்றுடன் முடிவடைந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் 47 ரன்கள் சேர்த்தார்.

    டெஸ்ட் போட்டியில் சொதப்பி, சர்ச்சையில் சிக்கி பின்னர் அணிக்கு திரும்பி மீண்டும் பார்முக்கு வந்துள்ள லோகேஷ் ராகுலுக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்று தொடக்க பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



    இந்நிலையில் இந்திய ‘ஏ’ அணியில் விளையாடும்போது ராகுல் டிராவிட் அதிக அளவில் உதவி புரிந்தார் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘ராகுல் டிராவிட் நீண்ட நேரங்கள் செலவழித்தேன். அப்போது எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டேன். அவருடன் செலவழித்த நேரம் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட உதவியது. மீண்டும் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து, ப்ளூ ஜெர்சி அணிந்தது சிறப்பாக இருக்கிறது’’ என்றார்.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான முதல் நான்கு நாள் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணியில் லோகேஷ் ராகுல் இடம்பிடித்துள்ளார். #LokeshRahul
    இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் முடிந்தவுடன் இரண்டு நான்கு நாள் கொண்ட போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லோகேஷ் ராகுல் இடம்பிடித்துள்ளார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறி சிக்கிய ராகுல் ஒருநாள் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது நான்கு நாள் கொண்ட போட்டியிலும் இடம்பிடித்துள்ளார்.
    ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 73 ரன் விளாச இந்தியா ‘ஏ’ 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தியது #RishabhPant
    இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா ‘ஏ’ வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில் 4-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணியின் லோகேஷ் ராகுல், கெய்க்வார்டு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கெய்க்வார்டு ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஆனால் கேஎல் ராகுல் 42 ரன்கள் சேர்த்தார். ரிக்கி புய் 35 ரன்னிலும், கேப்டன் பவ்னே 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. ரிஷப் பந்த் 76 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 73 ரன்களும், ஹூடா 47 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.
    ×