செய்திகள்

ஐசிசி-யின் வருடாந்திர தரவரிசை அப்டேட்: டெஸ்டில் இந்தியா முதலிடம், ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து

Published On 2019-05-02 11:10 GMT   |   Update On 2019-05-02 11:10 GMT
ஐசிசி-யின் வருடாந்திர தரவரிசை அப்டேட்டில் இந்தியா டெஸ்டிலும், இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது #ICCTestRankings
கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் அணியை கணக்கிட்டு ஐசிசி-யால் தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரை முதல் இடத்தில் இருக்கும் அணி சிறந்த அணியாக கருதப்படும்.

அதன்பின் வருடாந்திர அப்டேட் தரவரிசை வெளியிடப்படும். இந்த தரவரிசையில் முன்னதாக உள்ள இரண்டு வருடங்கள் கணக்கிடப்படும். இதையெல்லாம் கணக்கிட்டு இந்த வருடத்திற்கான அப்டேட் செய்யப்பட்ட தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி 2015-16-ம் ஆண்டு நீக்கப்பட்டு, 2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளுக்கான 50 சதவீதம் மதிப்பீடு சேர்க்கப்பட்டுள்ளது.



அதன்படி இந்தியா 116 புள்ளியில் இருந்து மூன்று புள்ளிகளை இழந்து 113 புள்ளிகள் பெற்றுள்ளது. நியூசிலாந்து 108 புள்ளியில் இருந்து மூன்று புள்ளிகள் அதிகம் பெற்று 111 புள்ளிகள் பெற்றுள்ளது. இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. 3-வது இடத்தில் இருந்த நியூசிலாந்தை 4-வது இடத்திற்கு தள்ளியுள்ளது தென்ஆப்பிரிக்கா.
Tags:    

Similar News