செய்திகள்

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுக்கு வந்த சோதனை: தொடர்ச்சியாக ஐந்து முறை ‘டக்அவுட்’ ஆகி மோசமான சாதனை

Published On 2019-04-23 12:10 GMT   |   Update On 2019-04-23 12:10 GMT
ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அஷ்டோன் டர்னர் தொடர்ந்து ஐந்து முறை ‘டக்அவுட்’ ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். #IPL2019
ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஷ்டோன் டர்னர். இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்து 84 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியா தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



ஆனால் இதுவரை மூன்று போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். மூன்றிலும் ‘கோல்டன் டக்’ அதாவது சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதற்கு முன்பு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ‘டக்அவுட்’ ஆகியுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் டக்அவுட் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
Tags:    

Similar News