செய்திகள்

மலேசியாவுக்கு எதிரான ஆக்கி - இந்திய பெண்கள் அணி வெற்றி

Published On 2019-04-04 22:28 GMT   |   Update On 2019-04-04 22:28 GMT
மலேசியாவுக்கு எதிரான ஆக்கி தொடரை இந்திய அணி 3-0 என்ற என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது. #India #Malaysia #WomenHockey
கோலாலம்பூர்:

இந்தியா-மலேசியா பெண்கள் ஆக்கி அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது. இந்திய அணியில் வந்தனா கட்டாரியா 2 கோலும் (17-வது, 60-வது நிமிடம்), லால்ரெம்சியாமி ஒரு கோலும் அடித்தனர்.
Tags:    

Similar News