செய்திகள்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 189 ரன்னில் சுருண்டது

Published On 2019-03-13 14:31 GMT   |   Update On 2019-03-13 14:31 GMT
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 189 ரன்னில் சுருண்டது. #SAvSL
தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கையின் விக்கெட் மளமளவென சரிந்தது. அவிஷ்கா பெர்னாண்டே 29 ரன்களும், உபுல் தரங்கா 4 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து வந்த ஒஷாடா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

தொடர்ந்து விக்கெட்டுக்கள் சரிய இலங்கை அணி 97 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 9-வது வீரராக களம் இறங்கிய உடானா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் இலங்கை 150 ரன்னைத் தாண்டியது.

உடானா 57 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை 189 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நோர்ட்ஜெ 3 விக்கெட்டும் பெலுக்வாயோ 2 விக்கெட்டும் ஸ்டெயின், லுங்கி நிகிடி, ஷமிசி, டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News