search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை ஒருநாள் கிரிக்கெட்"

    கேப் டவுனில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இலங்கை 0-5 என ஒயிட்வாஷ் ஆனது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. மெண்டிஸ் அதிக பட்சமாக 56 ரன்னும், பெரேரா 33 ரன்னும், உடானா 32 ரன்னும் எடுத்தனர்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், நார்ட்ஜி தலா 2 விக்கெட்டும் நிகிடி, பெலுக்வாயோ தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடியது. அந்த அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து இருந்தபோது மின் விளக்கில் கோளாறு ஏற்பட்டது. மின் விளக்கில் ஏற்பட்ட கோளாறு சரியாகாததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது. இந்த விதிப்படி தென்ஆப்பிரிக்காவுக்கு 28 ஓவர்களில் 95 ரன் இலக்காக இருந்தது. ஆனால் அந்த அணி 135 ரன் எடுத்து இருந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கிராம் 67 ரன் எடுத்தார். மலிங்கா, பெரேரா தலா 1 விக்கெட் எடுத்தனர்.



    ஏற்கனவே 4 ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியுடன் ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

    இலங்கை அணி தான் மோதிய 5 ஆட்டங்களிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 19-ந்தேதி கேப் டவுனில் நடக்கிறது.
    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது.

    இந்நிலையில் 4-வது போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் குயின்டான் டி காக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் டு பிளிசிஸ் 43 ரன்கள் சேர்த்தார்.



    மில்லர், டுமினி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையாக 25 மற்றும் 31 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இலங்கையை 5-0 என ஒயிட்வாஷ் செய்யும்.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 189 ரன்னில் சுருண்டது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கையின் விக்கெட் மளமளவென சரிந்தது. அவிஷ்கா பெர்னாண்டே 29 ரன்களும், உபுல் தரங்கா 4 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து வந்த ஒஷாடா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    தொடர்ந்து விக்கெட்டுக்கள் சரிய இலங்கை அணி 97 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 9-வது வீரராக களம் இறங்கிய உடானா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் இலங்கை 150 ரன்னைத் தாண்டியது.

    உடானா 57 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை 189 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நோர்ட்ஜெ 3 விக்கெட்டும் பெலுக்வாயோ 2 விக்கெட்டும் ஸ்டெயின், லுங்கி நிகிடி, ஷமிசி, டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    குயின்டான் டி காக்கின் அபார சதத்தால 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா #SAvSL
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. தனது 14-வது சதத்தை அடித்த குயின்டான் டி காக் 121 ரன்களும் (108 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), வாண்டர் டஸ்சன் 50 ரன்களும், டேவிட் மில்லர் 41 ரன்களும் எடுத்தனர்.

    அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை அணி 24 ஓவர்களில் 193 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.



    இதை நோக்கி ஆடிய இலங்கை அணியால் 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது ஆட்டம் நாளை மறுதினம் போர்ட்எலிசபெத்தில் நடக்கிறது.
    ×