செய்திகள்

பயிற்சியின்போது காயம்: முதல் ஒருநாள் போட்டியில் டோனி பங்கேற்பாரா?

Published On 2019-03-01 09:50 GMT   |   Update On 2019-03-01 09:50 GMT
வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது எம்எஸ் டோனியின் கையில் பந்து பலமாக தாக்கியது. இதனால் முதல் போட்டியில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #INDvAUS
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஐதராபாத்தில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான எம்எஸ் டோனி வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் ராகவேந்த்ரா வீசிய பந்து டோனியின் வலது கையில் (Forearm) தாக்கியது. இதனால் வலி தாங்காமல் அத்துடன் பயிற்சியை முடித்துக் கொண்டார்.



இதனால் நாளை நடக்கும் முதல் போட்டியில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் முதல் போட்டியில் டோனி கலந்து கொள்வாரா? அல்லது கலந்து கொள்ளமாட்டாரா? என்பது குறித்து அணி நிர்வாகம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஒருவேளை டோனி நாளைய போட்டியில் பங்கேற்காவிடில், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்.
Tags:    

Similar News