செய்திகள்

விதர்பா 312 ரன்னில் ஆல்அவுட்: புஜாரா ஏமாற்றத்தால் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்

Published On 2019-02-04 12:31 GMT   |   Update On 2019-02-04 12:31 GMT
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா 312 ரன்னில் ஆல்அவுட் ஆகிய நிலையில், புஜாரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். #RanjiTrophyFinal
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற விதர்பா பேட்டிங் தேர்வு செய்தது. வாசிம் ஜாபர் (23) உள்பட முன்னணி வீரர்கள் சொதப்பியதால், விதர்பா நேற்றைய  முதல்நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களே எடுத்திருந்தது. கார்னிவர் 31 ரன்னுடனும், அக்சேய் வகார் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கார்னிவர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அக்சேய் வகார் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் 13 ரன்னும், குர்பானி 6 ரன்னும் சேர்க்க விதர்பா 312 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. கார்னிவர் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுராஷ்டிரா அணி சார்பில் உனத்கட் அதிகபட்சமாக மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் சவுராஷ்டிரா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் தேசாய் 10 ரன்னிலும், அடுத்து வந்த ஜடேஜா 18 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது வீரராக களம் இறங்கிய புஜாரா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் சவுராஷ்டிரா அணி நெருக்கடிக்குள்ளானது.

அடுதது வந்த வசவதா 13 ரன்னிலும், ஜேக்சன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட் வீழந்தாலும் மற்றொரு தொடக்க வீரரான விக்கெட் கீப்பர் ஸ்னெல் பட்டேல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இவரது அரைசதத்தால் சவுராஷ்டிரா 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது.

ஸ்னெல் பட்டேல் 87 ரன்னுடனும், மன்கட் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை சவுராஷ்டிரா 154 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
Tags:    

Similar News