செய்திகள்

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான நான்கு நாள் போட்டி: இந்தியா ‘ஏ’ அணியில் லோகேஷ் ராகுல்

Published On 2019-01-30 14:37 GMT   |   Update On 2019-01-30 14:37 GMT
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான முதல் நான்கு நாள் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணியில் லோகேஷ் ராகுல் இடம்பிடித்துள்ளார். #LokeshRahul
இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் முடிந்தவுடன் இரண்டு நான்கு நாள் கொண்ட போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லோகேஷ் ராகுல் இடம்பிடித்துள்ளார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறி சிக்கிய ராகுல் ஒருநாள் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது நான்கு நாள் கொண்ட போட்டியிலும் இடம்பிடித்துள்ளார்.
Tags:    

Similar News