செய்திகள்

1983 உலகக்கோப்பை, 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை போன்று மிகப்பெரியது- ரவி சாஸ்திரி

Published On 2019-01-07 10:05 GMT   |   Update On 2019-01-07 10:05 GMT
1983 உலகக்கோப்பை மற்றும் 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதுபோல் இந்த வெற்றி மிகப்பெரியது என்று ரவி சாஸ்திரி சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிட்னியில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாகவும், 72 வருடத்திற்குப்பிறகும் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது.

தொடரை கைப்பற்றிய பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘1983 உலகக்கோப்பை மற்றும் 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியதை போல் இந்த தொடரை கைப்பற்றியது பெரிய சாதனை அல்லது அதைவிட மிகப்பெரிய சாதனை’’ என்றார்.

பாகிஸ்தானை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும்போது இந்திய அணியில் ரவி சாஸ்திரி இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News