செய்திகள்

சதத்தை நெருங்கும்போது பதற்றமாக இருந்தது: 159 ரன் குவித்த ரிஷப் பந்த் சொல்கிறார்

Published On 2019-01-04 10:15 GMT   |   Update On 2019-01-04 10:17 GMT
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்ததால், சதத்தை நெருங்கும்போது சற்று பதற்றமாக இருந்தது என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193 ரன்கள் குவித்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதனால் இன்று சதத்தை நெருங்கும்போது சற்று பற்றமாக இருந்தது என்று ரிஷப் பந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து ரிஷப் பந்து கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவில் விளையாடும்போது இரண்டுமுறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டேன்.

இதனால் இன்றைய போட்டியில் 90-ஐ தாண்டும்போது சற்று பதற்றமாக இருந்தது. இதனால் சற்று பயமாகவும் இருந்தது. இருந்தாலும் வெற்றிகரமாக சதம் அடித்தேன். சதம் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்திய என்னுடைய ஸ்டைலை நான் விரும்புகிறேன்.

நான் அதேபோல் செய்வேன் என்று நினைத்தது கிடையாது. ஆனால் சந்தோசத்தை வெளிப்படுத்தும்போது தானாக வெளியாகிறது’’ என்றார்.
Tags:    

Similar News