செய்திகள்

ரஞ்சி கோப்பையில் 11 ஆயிரம் ரன்களை கடந்து வாசிம் ஜாபர் சாதனை

Published On 2018-11-21 10:51 GMT   |   Update On 2018-11-21 10:51 GMT
40 வயதாகும் வாசிம் ஜாபர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். #RanjiTrophy #WasimJaffer
இந்திய அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர். 40 வயதாகும் இவர் ஆரம்பகால கட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது விதர்பா அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்.

ரஞ்சி கோப்பை 3-வது ரவுண்டில் விதர்பா பரோடா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய வாசிம் ஜாபர் 284 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் 153 ரன்கள் குவித்தார். கேப்டன் பாசல் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 300 ரன்கள் சேர்த்தார்.



வாசிம் ஜாபர் 97 ரன்னைத் தொட்டபோது ரஞ்சி டிராபியில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 11 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வாசிம் ஜாபர் 11056 ரன்கள் அடித்துள்ளார். அமோல் முசும்தார் 9202 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News