செய்திகள்

தேசிய இளையோர் விளையாட்டு - தமிழக கைப்பந்து அணிகள் 25ந்தேதி தேர்வு

Published On 2018-11-21 05:05 GMT   |   Update On 2018-11-21 05:05 GMT
தேசிய இளையோர் விளையாட்டு போட்டிக்கான தமிழக கைப்பந்து அணிகள் தேர்வு சென்னையில் வருகிற 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. #Volleyball
சென்னை:

‘கேலோ இந்தியா’ இளையோர் (21 வயதுக்கு உட்பட்டோருக்கான) விளையாட்டு போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் ஜனவரி 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு சென்னையில் வருகிற 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.

ஆண்கள் அணி தேர்வு நேரு ஸ்டேடியத்திலும், பெண்கள் அணி தேர்வு நேரு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது. 1.1.1998-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் உரிய வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார். #Volleyball

Tags:    

Similar News