செய்திகள்

டி20 போட்டியில் அதிக சதம்- முதலிடத்தில் ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா

Published On 2018-11-07 14:42 GMT   |   Update On 2018-11-07 14:42 GMT
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். #RohitSharma
இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 197 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா. அவர் 58 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 111 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



இந்த சதம் மூலம் டி20 போட்டியில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நியூசிலாந்து வீரர் கொலின் முன்றோ மூன்று சதங்களுடன் 2-வது இடத்திலும், கிறிஸ் கெய்ல் மற்றும் மார்ட்டின் கப்தில் இரண்டு சதங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

ரோகித் சர்மா 86 டி20 போட்டியில் 4 சதம், 15 அரைசதங்களுடன் 2203 ரன்கள் குவித்துள்ளார்.
Tags:    

Similar News