செய்திகள்

ஆஸ்திரேலியா ஏ டி20 கிரிக்கெட் - இந்திய பெண்கள் ஏ அணி அறிவிப்பு

Published On 2018-10-20 13:26 GMT   |   Update On 2018-10-20 13:26 GMT
ஆஸ்திரேலியா ஏ டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் விளையாடும் இந்திய பெண்கள் ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #WomensCricket #India
புதுடெல்லி:

டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக டி20 ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு போட்டிகளும் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ டி20 கிரிக்கெட்டில் இந்திய ஏ பிரிவு பெண்கள் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் துணை கேப்டனாக ஸ்மிர்தி மந்தானா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இவர்களின் தலைமையில் மித்தாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிகேஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா, டான்யா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், ஏக்தா பிஷ்ட், டி.ஹேமலதா, மான்சி ஜோஷி, பூஜா வஸ்திராக்கர், அருந்ததி ரெட்டி ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். #WomensCricket #India 
Tags:    

Similar News