செய்திகள்

ஆண்டர்சனின் பந்து வீச்சை பார்த்து நிறைய கற்று இருக்கிறேன்- ‌ஷமி

Published On 2018-08-29 03:49 GMT   |   Update On 2018-08-29 03:49 GMT
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை பார்த்து ஏராளமான விஷயங்களை கற்று இருக்கிறேன் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதாம்ப்டனில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்றைய பயிற்சிக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி அளித்த பேட்டியில், ‘‘இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்  ஜேம்ஸ் ஆண்டர்சனின் (இதுவரை 557 விக்கெட் வீழ்த்தியுள்ளார்) பந்து வீச்சை உன்னிப்பாக கவனித்து, அதில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன்.



ஆண்டர்சன் அதிகமான வேகத்தில் பந்து வீசுவதில்லை. ஆனாலும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்துகிறார், இது எப்படி என்பதை எப்போதும் கவனிப்பது உண்டு. அவர் பந்தை எந்த மாதிரி பிட்ச் செய்து, எந்த அளவுக்கு எழுப்புகிறார் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். வித்தியாசமான சீதோஷ்ண நிலையில் வித்தியாசமாக பந்து வீசக்கூடிய ஒரு பவுலர் ஆண்டர்சன்’’ என்றார்.
Tags:    

Similar News