search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது ஷமி"

    • 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதசேம் மாநிலம் அம்ரோஹாவில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
    • கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    புதுடெல்லி:

    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    தொடர்ந்து, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெறுகின்றனர். அர்ஜூனா விருதை 26 பேரும் பெறுகின்றனர்.

    விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.

    • இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • அர்ஜூனா விருது வென்ற வைஷாலி செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.

    புதுடெல்லி:

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது.

    சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் ஆடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிறந்த பந்துவீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச் சென்றார்.

    இதற்கிடையே, விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ சிறப்பு கோரிக்கையாக முகமது ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்திருந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள் டென்னிஸ் வீரர்களான சிராக் சந்திரசேகர் ஷெட்டி, சாத்விக் ஜெயராஜ் ஜோடிக்கு அளிக்கப்படுகிறது.


    இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி உள்பட 26 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
    • இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனை.

    ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அபாரமாக செயல்பட்டார். தொடரில் தான் விளையாடிய ஏழு போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது 2023 உலகக் கோப்பை தொடரில் மற்ற பந்துவீச்சாளர்களை விட அதிகம் ஆகும். இதில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஒரே உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகளை தகர்த்த முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனையாக அமைந்தது. இலங்கை அணிக்கு எதிராக முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சம்பவம் தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

     


    வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் போது தனது ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி தரையில் முழங்காலிட்டு அமர்ந்தார். இதனை நெட்டிசன்கள் வேறு விதத்தில் புரிந்து கொண்டு, அதனை சர்ச்சையாக்கும் செயலில் தீயாக ஈடுபட்டனர்.

    அதன் படி, "ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய போட்டி ஒன்றில் நீங்கள் தரையில் முழங்கால் வைத்தீர்கள். உடனே பாகிஸ்தானை சேர்ந்த சிலர், முகமது ஷமி ஒரு இந்திய முஸ்லீம், அவர் சஜ்தா (பிரார்த்தனை) செய்ய முற்பட்டார், ஆனால் இந்தியாவில் இதை செய்ய அவர் அஞ்சுகிறார்," என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முகமது ஷமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, "யாராவது சஜ்தா செய்ய நினைத்தால், யார் தடுக்க முடியும். நான் மற்ற மதத்தை சேர்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டேன், நீங்களும் மற்ற மதத்தை சார்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டீர்கள். எனக்கு சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை செய்வேன். அதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? நான் ஒரு முஸ்லீம் என்பதை பெருமையுடன் கூறுவேன். நான் ஒரு இந்தியன் என்று கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்."

     


    "எனக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், நான் இந்தியாவில் வசித்து இருக்க மாட்டேன். நான் சஜ்தா செய்ய யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டும் என்றால், நான் ஏன் இங்கு வாழ வேண்டும். நானும் அத்தகைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பார்த்தேன். நான் எப்போதாவது மைதானத்தில் சஜ்தா செய்திருக்கிறேனா? நான் ஏற்கனவே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். நான் சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை எங்கு செய்ய வேண்டும் என சொல்லுங்கள், நான் அதை செய்வேன்."

    "இந்தியாவின் ஒவ்வொரு மேடையிலும் நான் அதை செய்வேன். யாரும் என்னை தடுக்க முடியாது. இவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் உங்களுடனோ அல்லது என்னுடனோ இல்லை. அவர்கள் யாரையும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு பிரச்சனை மட்டுமே ஒரே குறிக்கோள். நான் எனது உடலை வருத்திக் கொண்டு பந்துவீசியதால் முழங்காலிட்டேன். எனக்கு சோர்வாக இருந்தது. மக்கள் அந்த செய்கையை வேறு மாதிரி நினைத்து கொண்டனர்," என தெரிவித்துள்ளார். 

    • நைனிடாலில் விபத்தில் சிக்கிய நபரை முகமது ஷமி மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தார்.
    • ஷமியின் இச்செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

    நைனிடால்:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் உள்ள மலைப்பாதை வழியாக சென்ற ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்பகுதி வழியாக வந்த இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விபத்தைக் கண்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து பள்ளத்தில் சிக்கிய நபரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து, முகமது ஷமி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரை மீட்டது குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஷமி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு 2வது வாழ்க்கையை கொடுத்தார். அவரது கார் நைனிடால் அருகே மலைப்பாதையில் இருந்து எனது காருக்கு முன்னால் கீழே விழுந்தது. நாங்கள் அவரை மிகவும் பாதுகாப்பாக வெளியே எடுத்தோம் என பதிவிட்டுள்ளார்.

    முகமது ஷமியின் இச்செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது பாராட்டுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

    • வங்காளதேச அணிக்கெதிராக 3 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்

    உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழுவில் முகமது ஷமிக்கு முதலில் இடம் கிடைக்கவில்லை. அவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விளையாடவில்லை.

    உலகக்கோப்பை நெருங்கியதால், முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகினார்.

    பும்ராவுக்குப் பதிலாக தீபக் சாஹர் அல்லது அவேஷ் கான் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ விரும்பியது. ஆனால் அவர்களின் பந்து வீச்சு சரியான முறையில் இல்லாத காரணத்தினால், முகமது ஷமியை பிசிசிஐ தேர்வு செய்தது.

    டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசும் முகமது ஷமியால் டி20-யில் சிறப்பாக பந்து வீச முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களில் ஷமி சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். அந்த அனுபவத்தை வைத்து பிசிசிஐ அவரை ஆடும் லெவன் அணியில் சேர்த்தது.

    இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளிலும் முகமது ஷமி அபாரமாக பந்து வீசியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 4-25-1 எனவும், நெதர்லாந்துக்கு எதிராக 4-27-1 எனவும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-13-1 எனவும், 3-25-1 எனவும் அசத்தியுள்ளார்.

    டி20-யில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் சேர்த்த உடனேயே சிறப்பாக பந்து வீசுவதற்கான காரணம் குறித்து அவர் விவரித்துள்ளார்.

    இதுகுறிதது அவர் கூறியதாவது:-

    எல்லாமே முன்னேற்பாடை சார்ந்தது. எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என அணி நிர்வாகம் என்னிடம் சொல்லியுள்ளது. அணிக்கு தேவைப்படும்போது உங்களுக்கு அழைப்பு வரும். இதைத்தான் நாங்கள் எப்போதுமே சொல்வோம். நீங்கள் என்னுடைய வீடியோவை பார்த்தீர்கள் என்றால், நான் எப்போதுமே பயிற்சியை விட்டது கிடையாது, என்னுடைய பயிற்சி தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.

    ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு வடிவ கிரிக்கெட்டிற்கு மாறுவது, அதாவது ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு மாறுவது எப்போதுமே எளிதானது அல்ல.

    நான் டி20 உலகக் கோப்பைக்குபின் தற்போது டி20-யில் விளையாடுகிறேன். ஒரு வீரரருக்கு என்ன நிறம் பந்து என்பதை விட, நம்பிக்கை தேவை என்பது ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு நிச்சயமாக பயிற்சி தேவை.

    புதுப் பந்து, பழைய பந்து ஆகியவற்றில் பந்து வீசுவது அனுபவத்தின் காரணமாகத்தான். போட்டியை என்னைப் பார்த்தீர்கள் என்றால், நான் புதுப் பந்தில்தான் பந்து வீசுவேன். ஆநால், பயிற்சியின் போது, நான் வழக்கமாக பழைய பந்து அல்லது ஓரளவிற்கு தேய்ந்த புதுப்பந்து ஆகியவற்றைதான் பயன்படுத்துவேன்.

    கடந்த வருடம் உலகக் கோப்பை தொடரின்போது, பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய இப்திகாரை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

    • பும்ராவுக்கு பதில் தென் ஆப்பிரிக்கா தொடரில் முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்ட பும்ரா ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    2-வது போட்டி நாளை மறுநாள் கவுகாத்தியில் நடக்கிறது. இந்த நிலையில் காயம் காரணமாக விலகியுள்ள பும்ராவுக்கு பதில் தென் ஆப்பிரிக்கா தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். இதனை இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருந்தார்.

    முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்ட பும்ரா ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. அதன்பின் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவர் தொடரில் விளையாடினார்.

    இந்த நிலையில் முதுகுவலி காயம் காரணமாக பும்ரா, 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு ஸ்கேன் செய்ததில் முதுகில் உள்ள எலும்பில் அழுத்தத்தினால் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக அவர் உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு இல்லை. தற்போது அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

    பும்ரா விலகுவதால் அவருக்கு பதில் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, தீபக் சாகர், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம் பெற்றனர்.

    தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் முகமது ஷமி இடம் பெற்றிருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையாததால் அத் தொடரில் இருந்து விலகினார்.

    தென் ஆப்பிரிக்கா தொடரில் தீபக் சாகர் விளையாடி வருகிறார். இவர்களில் ஒருவர் பும்ராவுக்கு பதில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் இருவர் இடையே போட்டி நிலவுகிறது. இதில் தீபக் சாகருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில் உலக கோப்பை இந்திய அணியில் முகமது ஷமியை தேர்வு செய்யாததற்கு பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா டி20 தொடரில் விளையாடுகிறது.
    • முதல் போட்டி செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் முதல் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    மேலும், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #MohammedShami
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜஹன். இவர் கடந்த வருடம் முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமைப்படுத்துதல், பாலியல் கொடுமை செய்வதாக குற்றம்சாட்டினார்.

    மேலும் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால் ஹசின் குற்றச்சாட்டை முகமது ஷமி முற்றிலும் மறுத்தார். இது தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றத்தில் ஹசின் முறையிட்டார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஷமி வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஷமி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். பின்னர் அதில் இருந்து மீண்ட அவர், இந்திய அணியில் இடம்பிடித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

    இந்நிலையில் முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் அவர் மீது வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை பிரிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    ×