என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மாதம் ரூ.4 லட்சம் போதாது.. ஜீவனாம்சத்தை அதிகரிக்க முகமது ஷமி முன்னாள் மனைவி மனு - உச்சநீதிமன்றம் உத்தரவு
    X

    மாதம் ரூ.4 லட்சம் போதாது.. ஜீவனாம்சத்தை அதிகரிக்க முகமது ஷமி முன்னாள் மனைவி மனு - உச்சநீதிமன்றம் உத்தரவு

    • வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2014-ம் ஆண்டு ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.
    • நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.

    2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் 2018 இல் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

    ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்நிலையில் தனக்கும் தனது மகளுக்கும் ஜீவனாம்ச தொகையை அதிகரிக்கக் கோரி ஹசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    முகமது ஷமியின் வருமானம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று அவர் ஹசின் ஜஹான் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த மனுவைத் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×