என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை- அஜித் அகார்கரை விமர்சித்த ஷமி
    X

    இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை- அஜித் அகார்கரை விமர்சித்த ஷமி

    • உடற்தகுதிக்காக என்னை இந்திய அணி தொடர்பு கொள்ளவில்லை.
    • நான் வலியில் விளையாடவோ அல்லது அணியை துன்பப்படுத்தவோ விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

    இந்த இரு தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒருநாள் அணியில் சீனியர் வீரர்கள் ரோகித், விராட் கோலி மட்டுமே இடம்பெற்றனர். மற்ற சீனியர் வீரர்களான ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இந்த அணி இடம் பிடிக்கவில்லை.

    2023 உலகக் கோப்பைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஷமி, அதன்பிறகு காயத்தில் இருந்து மீண்டார். 35 வயதான அவர் சிறிது காலமாக 3 வடிவிலான எந்த அணியிலும் இடம்பெறவில்லை. குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. கடைசியாக ஜூன் 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஷமி விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏன் விளையாட முடியாது என தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் முகமது ஷமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் முன்பே சொல்லிருக்கேன். தேர்வு என்பது என் கையில் இல்லை. உடற்தகுதி பிரச்சினை இருந்தால், நான் இங்கே பெங்கால் அணிக்காக விளையாடக்கூடாது.

    உடற்தகுதிக்காக என்னை இந்திய அணி தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏன் விளையாட முடியாது.

    நான் வலியில் விளையாடவோ அல்லது அணியை துன்பப்படுத்தவோ விரும்பவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வந்து வலுவான மறுபிரவேசம் செய்ய விரும்பினேன். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.

    அவர்கள் (தேர்வுக்குழுக்கள்) என்னை எப்போது தேர்வு செய்ய விரும்புகிறார்களோ அப்போது நான் செல்ல தயாராக இருக்கிறேன்.

    என முகமது ஷமி கூறினார்.

    இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×