செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

Published On 2018-08-28 08:06 GMT   |   Update On 2018-08-28 08:06 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததால் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. #AsianGames2018 #PVSindhu
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை தாய் சியுயிங் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடுமையாக போராடிய சிந்து, 13-21, 16-21 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.



இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 16 வெள்ளி, 21 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியா மொத்தம் 2 பதக்கங்கள் வென்றுள்ளது. நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால் தோல்வி அடைந்ததால் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #PVSindhu

Tags:    

Similar News