search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய விளையாட்டு போட்டி"

    • ரொக்க பரிசுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • தேசிய அளவிலான கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

    ஆசிய விளையாட்டு போட்டி 2023ல் வெற்றிப் பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவில் ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.50 லட்சம், வெள்ளி பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கு ரூ.20 லட்சம் என தமிழக வீரர்கள் 20 பேருக்கு ரூ.9.4 கோடி ரொக்க பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பின்னர், ரொக்க பரிசுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆசிய விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்தமாக 107 பதக்கங்களை இந்தியா பெற்றது. இதில், தமிழக வீரர்கள் 17 பதக்கங்களை பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை குவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    அதிக பதக்கம் வாங்கி கொடுத்த மாநிலத்தில் 5வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

    அனைத்து துறையிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகிறது.

    துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், துறையும் ஸ்டாராக விளங்கி வருகிறது.

    உங்களை பார்த்து மேலும் பல வீரர்கள் வருவார்கள் என நம்புகிறேன்.

    தேசிய அளவிலான கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்.

    சென்னை:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட இந்திய அணியை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள்!

    107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபடி அணியினர், இறகுப்பந்து நட்சத்திரங்கள் என இந்தியாவின் பல தரப்பட்ட திறமையாளர்களும் பெரிதும் இத்தொடரில் மின்னியுள்ளனர்.

    குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்குப் பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள்.

    இத்தகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும் சாதனைகளும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி, வெகு சிறப்பு!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • தமிழக வீரர்கள் 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர்.

    19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா இன்றுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது.

    ஆசிய வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாடி சாதனை படைத்த வீரர்- வீராங்கனைகளுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு வித்திட்ட நம் வீரர் - வீராங்கனையருக்கு வாழ்த்துகள்.

    குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர்கள் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம் - 7 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்கள் என 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்.

    நம் வீரர்- வீராங்கனையரின் இந்த சாதனை ஏராளமான இளைஞர்கள்- இளம்பெண்களை விளையாட்டுத்துறையை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கச் செய்யும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
    • வருகிற 10-ந் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி முதல் முறையாக 3 இலக்க பதக்கத்தை தொட்டு புதிய வரலாறு படைத்தது.

    100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். இது அவர் தனது 'எக்ஸ்' பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனையாகும். 100 பதக்க மைல்கல்லை எட்டி வியக்கத்தக்க சாதனையால் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தியாவின் இந்த வரலாற்று சாதனைக்கு வழி வகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் நம்மை பெருமைப்படுத்திவிட்டனர்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தவும், வருகிற 10-ந் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் 48 ரன்கள் எடுத்தது.
    • மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வங்காளதேசம் எட்டியது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்காளதேசம் 5 ஓவரில் 65 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆடிய வங்காளதேசம் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேச அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    • ஜப்பானை 5- 1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
    • இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும்.

    சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 11வது நாளான இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா- ஜப்பான் மோதியது.

    இதில், ஜப்பானை 5- 1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்றது உற்சாகமளிக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

    இவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை விளையாட்டை மட்டுமல்ல, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளன.

    இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.
    • மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.

    25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் பிரிவில் இந்திய மகளிர் அணியினர் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். மேலும் இதே பிரிவில் மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகிய மூவரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். சிஃப்ட் சாம்ரா - ஆஷி சௌக்ஷி ஆகியோர் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர்.

    • படகு போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    • இதன் மூலம் இந்தியா மொத்தம் 4 வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

    படகு போட்டியில் மகளிர் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார். 11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை இந்தியா வென்றது.

    தாய்லாந்தின் நெப்போஸ்ர்ன் தங்க பதக்கமும், சிங்கப்பூர் வெண்கல பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.
    • இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து வந்தது.

    ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இலங்கை அணி சார்பில் பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணி சார்பில் களமிறங்கிய சமாரி மற்றும் அனுஷ்கா முறையே 12 மற்றும் 1 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த விஷ்மியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். பிறகு வந்த ஹாசினி மற்றும் நிலாக்ஷி முறையே 25 மற்றும் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து வந்தவர்கள் அதிக ரன்களை எடுக்காத நிலையில், இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து வெறும் 97 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டிடாஸ் சத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

    ராஜேஷ்வரி கெய்க்வாட் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரக்கர் மற்றும் தேவிகா வைத்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருப்பதை அடுத்து, இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 116 ரன்களை எடுத்தது.

    ஹாங்சோ:

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இலங்கை அணி சார்பில் பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்தியாவின் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல், மக்காவ் நாட்டின் மார்கோ லியூங்குடன் மோதினார்.

    இதில் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.
    • இதில் 16- 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது.

    ஆரம்பம் முதலே இந்திய அணியின் அதிரடியாக ஆடி கோல்களை போட்டனர். முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 7-0 என முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 16-0 என அபார வெற்றி பெற்றது.

    லலித் உபாத்யாய், வருண் குமார் ஆகியோர் தலா 4 கோல்களும், மன்தீப் சிங் 3 கோல்களும், அபிஷேக், அமித் ரோஹிதாஸ், ஷம்ஷெர் சிங், சஞ்சய் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    ×