செய்திகள்

துலீப் கிரிக்கெட் டிராபி: இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 316 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

Published On 2018-08-24 11:27 GMT   |   Update On 2018-08-24 11:27 GMT
இந்தியா ப்ளூ அணிக்கெதிரான துலீப் கிரி்க்கெட் போட்டியில் இந்தியா ரெட் அணி 316 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #DuleepTrophy
இந்தியா ரெட், ப்ளூ, க்ரீன் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி நான்கள் நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா ரெட் - க்ரீன் அணிகள் மோதின. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

2-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா ரெட் - ப்ளூ அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்தியா ரெட் பேட்டிங் தேர்வு செய்தது. சஞ்சய், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். சஞ்சய் 72 ரன்கள் சேர்த்தார்.



பாபா அபரஜித் 48 ரன்களும், அஷுடோஷ் சிங் 46 ரன்னும், சித்தேஷ் லாட் 88 ரன்களும் அடிக்க 316 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்தியா ப்ளூ அணி சார்பில் சவுரப் குமார, வகார் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஐயப்பா மற்றும உனத்கட் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். பின்னர் இந்தியா ப்ளூ பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News