search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ரெட்"

    துலீப் கிரிக்கெட்டில் இந்தியா ரெட்டை இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ப்ளூ வீழ்த்தி வெற்றி பெற்றது#DuleepTrophy
    துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா ப்ளூ - இந்தியா ரெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 4-ந்தேதி திண்டுக்கல்லில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ப்ளூ பேட்டிங் தேர்வு செய்தது. என் கங்ட்டா (130) சதம் அடிக்க இந்தியா ப்ளூ முதல் இன்னிங்சில் 167.3 ஓவரில் 541 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்தியா ரெட் சார்பில் பர்வேஸ் ரசூல் 4 விக்கெட்டும், ஹிர்வானி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் தொடங்கியது. இந்தியா ப்ளூ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 182 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. ஸ்வாப்னில் சிங் அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    பின்னர் 359 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா ரெட் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் இந்தயா ரெட் திணறியது. முதல் இன்னிங்சில் 182 ரன்களில் ஆட்டமிழந்த இந்தியா ரெட், 2-வது இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா ப்ளூ இன்னிங்சில் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹூடா, சவுரப் குமார் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    துலீப் கிரிக்கெட்டில் இந்தியா ரெட் அணிக்கெதிராக இந்தியா ப்ளூ 541 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. #DuleepTrophy
    துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா ப்ளூ - இந்தியா ரெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் (கடந்த 4-ந்தேதி) திண்டுக்கல்லில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ப்ளூ பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா ப்ளூ அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். தொடக்க வீரர்கள் சராசரியாக ரன்கள் அடிக்க 5-வது வீரர் புய் 60 ரன்னும், அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் 96 ரன்களும், என் கங்ட்டா 130 ரன்களும், ஸ்வாப்னில் சிங் 69 ரன்களும் அடிக்க இந்தியா ப்ளூ முதல் இன்னிங்சில் 167.3 ஓவரில் 541 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    இந்தியா ரெட் சார்பில் பர்வேஸ் ரசூல் 4 விக்கெட்டும், ஹிர்வானி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    இந்தியா ப்ளூ அணிக்கெதிரான துலீப் கிரி்க்கெட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ரெட் அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. #DuleepTrophy
    இந்தியா ரெட், ப்ளூ, க்ரீன் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி நான்கள் நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா ரெட் - க்ரீன் அணிகள் மோதின. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், 2-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா ரெட் - ப்ளூ அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற இந்தியா ரெட் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் சஞ்சய் 72 ரன்கள் சேர்த்தார். பாபா அபரஜித் 48 ரன்களும், அஷுடோஷ் சிங் 46 ரன்னும், சித்தேஷ் லாட் 88 ரன்களும் அடிக்க 316 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்தியா ப்ளூ அணி சார்பில் சவுரப் குமார, வகார் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஐயப்பா மற்றும உனத்கட் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    அதன்பின், இந்தியா ப்ளூ முதல் இன்னிங்சை ஆடியது. அந்த் அணியின் துருவ் ஷோரி மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடி 97 ரன்கள் எடுத்தார். ரிக்கி புயி 41 ரன்களிலும், ஜெயதேவ் உனத்கட் மற்றும் தவாய் குல்கர்னி ஆகியோர் 39 ரன்களிலும் அவுட்டாகினர். இறுதியில், இந்தியா ப்ளூ 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா ரெட் சார்பில் பர்வேஸ் ரசூல் 4 விக்கெட்டும், ரஜ்னீஷ் குர்பானி, அபிமன்யு மிதுன், பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 23 ரன்கள் முன்னிலையுடன் இந்திய ரெட் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் அபினவ் முகுந்த அரை சதமடித்து அவுட்டானார். சித்தேஷ் லாட் 47 ரன்னுடனும், அக்‌ஷய் வத்கர் 30 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். இதுவரை இந்தியா ரெட் அணி 179 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #DuleepTrophy
    இந்தியா ப்ளூ அணிக்கெதிரான துலீப் கிரி்க்கெட் போட்டியில் இந்தியா ரெட் அணி 316 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #DuleepTrophy
    இந்தியா ரெட், ப்ளூ, க்ரீன் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி நான்கள் நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா ரெட் - க்ரீன் அணிகள் மோதின. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    2-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா ரெட் - ப்ளூ அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்தியா ரெட் பேட்டிங் தேர்வு செய்தது. சஞ்சய், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். சஞ்சய் 72 ரன்கள் சேர்த்தார்.



    பாபா அபரஜித் 48 ரன்களும், அஷுடோஷ் சிங் 46 ரன்னும், சித்தேஷ் லாட் 88 ரன்களும் அடிக்க 316 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்தியா ப்ளூ அணி சார்பில் சவுரப் குமார, வகார் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஐயப்பா மற்றும உனத்கட் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். பின்னர் இந்தியா ப்ளூ பேட்டிங் செய்து வருகிறது.
    ×