செய்திகள்

எட்ஜ்பாஸ்டனை விட அடிலெய்டு சதம்தான் பெஸ்ட் என்கிறார் விராட் கோலி

Published On 2018-08-03 14:47 GMT   |   Update On 2018-08-03 14:47 GMT
எட்ஜ்பாஸ்டனில் அடித்த சதத்தை விட 2014-ல் அடிலெய்டு மைதானத்தில் அடித்த சதம்தான் பெஸ்ட் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #ViratKohli
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்தது.

முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த பின்னர், வீராட் கோலி கடைநிலை வீரர்களான இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோரை வைத்துக் கொண்டு 149 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தை மிகவும் இக்கட்டான நிலையில் சுவைத்த விராட் கோலி, அடிலெய்டு சதம்தான் பெஸ்ட் என்று தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எட்ஜ்பாஸ்டன் சதம் அடிலெய்டில் அடித்த செஞ்சூரிக்கு அடுத்ததாகத்தான் இருக்கும். அடிலெய்டு சதம் மிகச்சிறந்த ஞாபகமாக இன்னும் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அது 2-வது இன்னிங்சில் நாங்கள் சேஸிங் செய்து கொண்டிருந்தபோது வந்ததாகும். நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளேன்.

இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, 149 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய வாய்ப்பு கிடைத்ததால் மிக மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் இங்கு போட்டியிட வந்திருக்கிறோம். அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News