செய்திகள்

இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் இத்தனை லட்சம் சம்பாதிக்கிறாரா விராட் கோலி?

Published On 2018-07-25 15:05 GMT   |   Update On 2018-07-25 15:05 GMT
இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர் போஸ்ட் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ரூ. 82.5 லட்சம் சம்பாதிக்கிறார். #ViratKohli
பொதுமக்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் சமூக இணைய தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தனக்கு பிடித்த பிரபலங்களை பின்தொடர்ந்து அவர்கள் வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கிறார்கள்.

இந்திய அணி கேப்டனான விராட் கோலியை டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள். அவரை இரண்டு கோடியே 20 லட்சம்போர் பின் தொடர்கிறார்கள்.



இன்ஸ்டாகிராமில் அவர் பேட்டோ ஒன்றை போஸ்ட் செய்தால் அதற்கு லட்சக்கணக்கான லைக்கும், ஆயிரக்கணக்கான ஷேரும் கிடைக்கிறது. விராட் கோலிக்கு ஸ்பான்ஸ்ர்டு போஸ்ட்  மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர் (ரூ. 82 லட்சத்து 49 ஆயிரத்து 400) கிடைக்கிறது.

இதன்மூலம் விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோலி 9-வது இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர் ரெனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.

இன்ஸ்டாகிராம் போஸ்ட் செடுலிங் டூல் ஆன HopperHQ.com இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News